பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு!

பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு ‘அயலவருக்கு உதவுவோம்’ திட்டத்தின் கீழ் நேற்று மாலை இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரும், அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம்.சபீஸின் அனுசரணையில் இந் நிவாரப்பணி நடைபெற்றது.

நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை மாநகரசபை பிரதேசங்களை சேர்ந்த சுமார் 280 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் இதன்போது வழங்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் அல் – மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யு.எல்.என். ஹதா உமர், பிரதித்தலைவர் நாஸிக் பதுர்தீன், காரைதீவு பிரதேச ஒருங்கமைப்பாளர் மாகாதேவன் தனுசியன், கல்முனை பிரதேச ஒருங்கமைப்பாளரும், மாவட்ட ஊடக இணைப்பாளருமான எம்.என்.எம். அப்ராஸ், நிந்தவூர் பிரதேச ஒருங்கமைப்பாளர் எம். ஐசெக்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply