நீங்கள் எம்மீது வைத்த நம்பிக்கைக்கு விசுவாசமாக எமது அரசியல் பயணம் தொடரும்! – க.சுகாஷ் தெரிவிப்பு

தியாக தீபத்தை நினைவேந்த முற்பட்டபோது கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் ராஜீவ்காந்த் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர் தங்கராஜா ராஜசிறீக்காந்தன் ஆகியோரின் விடுதலைக்காக அக்கறையோடு செயற்பட்ட அனைவருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஷ் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களை கைது செய்ததிலிருந்து பிணையில் விடுவிக்கும்வரை களத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றி ஆதரவுக்கரம் நீட்டிய ஊடக உறவுகள், சட்டவிரோதக் கைதைக் கண்டித்து அறிக்கைகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக வலைத்தள உறவுகள், நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் ஆதரவுக்கரம் நீட்டிய பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

நீங்கள் எம்மீது வைத்த நம்பிக்கைக்கு விசுவாசமாக எமது அரசியல் பயணம் தொடரும் என்றும், இன விடுதலைக்காக ஆகுதியாகிய ஆத்மாக்களின் மீது சபதமெடுக்கின்றோம் எனவும் அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply