வடக்கு மாகாணத்தில் கொரோனாவால் 753 பேர் உயிரிழந்ததாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கில் இதுவரை 753 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேரும், செப்டம்பர் மாதத்தில் 334 பேரும் உயிரிழந்தனர்.
வடக்கில் இதுவரையில் 36 ஆயிரத்து 356 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், அதில் ஓகஸ்ட்டில் 14 ஆயிரத்து 634 பேரும், செப்டம்பர் மாதத்தில் 9 ஆயிரத்து 186 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கில் ஓகஸ்ட் 15 தொடக்கம் செப்டெம்பர் 15 வரையான காலப் பகுதியிலேயே அதிக இறப்புக்களும் தொற்றுக்களும் நிகழ்ந்துள்ளன.
இதனால், சடலங்களை எரியூட்டுவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டதால் 23 சடலங்கள் வெளி மாகாணங்களுக்கு அனுப்பி எரியூட்டப்பட்டன.
இருந்தபோதிலும், தற்போது வடக்கிலேயே சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும்; தெரிவித்தார்.


