இன்று முதல் சீனி இறக்குமதிக்கு அனுமதி!

இன்று முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அதிகாரி தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இத்தகைய இறக்குமதிக்காக கடன் கடிதங்களைத் திறக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை முதல் 10 நாட்களுக்குள் கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 81 சீனி அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஓய்வு பெற்ற லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பீரிஸ் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சீனி இறக்குமதி மூன்று மாதங்களாக தடை செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply