இராணுவத்தினரால் வீதி சோதனை முன்னெடுப்பு!

மன்னார் பகுதியில் இராணுவத்தினர் நேற்று மாலை முதல் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற பிரதான வீதி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் மக்களை சோதனை செய்துள்ளனர்.

மேலும், இன்று காலை முதல் இப் பகுதிகளில் இராணுவத்தினர் சோதனையில் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக, வாகனங்களில் பயணிப்பவர்களை நிறுத்தி அவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுவதோடு, வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது.

இச் சோதனை திடீரென இடம்பெற்று வருவதால் அவ் வீதியூடாக செல்லும் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

Leave a Reply