ஏர் இந்தியா பங்குகளை விற்க அரசு நடவடிக்கை!

<!–

ஏர் இந்தியா பங்குகளை விற்க அரசு நடவடிக்கை! – Athavan News

ஏர் இந்தியா நிறுவனத்தை யாருக்கு விற்பது என்பதை அரசு இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்தபட்ச விற்பனை விலையாக அரசு தீர்மானித்துள்ளதாகவும், யாருக்கு விற்பது என்பது குறித்து அரசு இறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவில் நூறு விழுக்காடு பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் ஐம்பது விழுக்காடு பங்குகளை விற்கும் நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக டாட்டா குழுமம், ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங் ஆகிய இருவரும் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply