மதுபோதையில் மகளை தாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்!

மதுபோதையில் தனது மகளை கடுமையாக தாக்கிய நபரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

கிருலப்பனை பாமன்கட பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் தினமும் வீட்டுக்குச் செல்லும் நபர், தனது மூன்று பிள்ளைகள் மீது தாக்குதல் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த 17 வயது மகள், வெள்ளவத்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்நபர் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்துவது தொடர்பில் ஏற்கெனவே பலமுறை பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் குறித்த நபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து எச்சரிக்கை செய்து விடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே, அவரைக் கைது செய்து, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிமன்ற நீதிவான் சஞ்சய எல்.எம்.விஜேசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply