இராணுவத்தினரால் கடத்தி கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட அதிகாரி! திடுக்கிடும் பின்னணி

தொட்டலங்க எல்லே அணியின் தலைவர் அகிலா சம்பத் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மோதர இராணுவ முகாம் கட்டளையிடும் அதிகாரி லெப்டினன் ஜெனரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதர குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில், இதுவரை மோதர இராணுவ முகாம் இராணுவத்தினர் 13 பேர் மற்றும் கிராம சேவகரான அகில சம்பத்தின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அகில சம்பத்தின் மனைவியான கிராமசேவகர், மோதர இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்துள்ளதுடன் இவ்விடயம் குறித்து அகில சம்பத் அறிந்து கொண்டதை அடுத்து, இராணுவ வீரர்கள் அவரை கடத்தி கொலை செய்து களனி ஆற்றில் வீசியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த கொலைக்கு மோதர இராணுவ முகாம் கட்டளையிடும் அதிகாரியும் உடந்தையாக இருந்துள்ளார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Leave a Reply