
12 – 19 வயதுக்கிடைப்பட்ட
விசேட தேவை, நோய்நிலையுள்ள
பிள்ளைகளுக்கு தடுப்பூசி!
விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கொரோனாத் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் வடக்கிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகளில் வைத்து வழங்கப்படவுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

