கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 734 பேர் இன்று வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 517,199 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 46ஆயிரத்து 805 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 631 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 457,488 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.


