
’வீட்டுத்திட்ட விவகாரம்’ பணம் பறிக்கும் கும்பல்கள் :மக்களே மிகுந்த
அவதானம் !
வீட்டுத்திட்டத்துக்கு தெரிவான பயனாளிகளுக்கு அழைப்பை மேற்கொண்டு மோசடியான முறையில் பணம் கறக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்று தெரிவித்து பயனாளிகளுடன் ஒருவர் உரையாடுகின்றார். ‘வீட்டுத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். வீட்டுத் திட்டத்துக்குரிய நிதி முழுமையாக விடுவிக்கப்படுவதற்கு முன்னர் முத்திரைக் காசு செலுத்தவேண்டும். அந்தப் பணத்தை வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு அனுப்பவும்’ என்று தெரிவித்து வங்கிக் கணக்கு இலக்கத்தையும் அனுப்பி வைக்கின்றனர்.
வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் எந்தப் பணத்தையும் முத்திரைக் காசு என்று செலுத்தத் தேவையில்லை. அப்படியொரு நடைமுறையே இல்லை. இது பணம் கறக்கும் கும்பல்களின் நடவடிக்கை என்று வீட்டுத்திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

