மஹிந்த உட்பட பலரை கைது செய்யுமாறு கோரி சட்டமா அதிபருக்கு கடிதம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடக் கோரி 34 அமைப்புகளும் 82 செயற்பாட்டாளர்களும சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

கோட்டகோகம மற்றும் மைனகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது, மே 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இவர்கள் உதவியதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply