மூடப்­ப­டும் நிலை­யில் பல தொழிற்­சா­லை­கள் ஐ.தே.க. எச்­ச­ரிக்கை!

மூடப்­ப­டும் நிலை­யில் பல தொழிற்­சா­லை­கள் ஐ.தே.க. எச்­ச­ரிக்கை!

“இலங்­கை­யின் தற்­போ­தைய அரசு சர்­வ­தேச ரீதி­யாக நாட்­டைச் சரி­யா­கக் கையா­ளாத கார­ணத்­தால் தற்­போது அதி­க­ள­வான தொழிற்­சா­ லைகள் மூடப்­ப­டும் நிலை­மைக்கு வந்­துள்­ளன. நாடு வர­லாறு காணாத பெரும் பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொள்­ளப்­போ­கின்­றது.” இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தவி­சா­ள­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான வஜிர அபே­வர்த்­தன தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்து வெளி­யி­டும்­போது அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,
“அரசு முன்­னெ­டுத்­து­வ­ரும் வினைத்­தி­ற­னற்ற செயற்­பா­டு­கள் கார­ண­மாக நாடு மீண்­டும் வரி­சை­யில் நிற்­கும் யுகத்தை நோக்­கித் தள்­ளப்­பட்­டுள்­ளது.
எதிர்­வ­ரும் மாதங்­க­ளில் நாடு பொரு­ளா­தார ரீதி­யா­கப் பெரும் நெருக்­கடி நிலை­மைக்கு உள்­ளாகி மக்­கள் கடும் கஷ்­டங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­ப­டும்.

வர­லாற்­றில் வினை­தி­ற­னற்ற, பல­வீ­ன­மான அர­சு­கள் ஆட்­சி­யி­லி­ருந்த அனைத்­துச் சந்­தர்ப்­பங்­க­ளி­லும் நாடு பொரு­ளா­தார ரீதி­யாக அழி­வைச் சந்­தித்­தது. அப்­ப­டி­யான அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளி­லும் ஐக்­கிய தேசி­யக் கட்­சியே நாட்டை மீண்­டும் கட்­டி­யெ­ழுப்­பி­யது” – என்­றார்.

Leave a Reply