அனலைதீவில் 20 மஞ்சள் மூடைகளுடன் இருவர் கைது!

அனலைதீவில் 20 மஞ்சள் மூடைகளுடன் இருவர் கைது!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அனலைதீவில் வீடொன்றில் இருந்து 20 மஞ்சள் மூடைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவற்குழி மற்றும் அனலைதீவைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கைது நடவடிக்கை இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள் மூடைகள் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளது.

Leave a Reply