வல்வெட்டித்துறையில் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது

வல்வெட்டித்துறை   பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றைக் கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் 26,28 மற்றும் 46 வயதுகளையுடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்ற நடவடிக்கைக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கூறினர்.

நாட்டில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நாட்டுக்குள் சட்டத்துக்கு முரணாகக் கொண்டுவருவதை கடத்தல் என சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.-

Leave a Reply