யாழில் தீக்காயங்களுக்குள்ளான ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில், மதுபோதையில் வாகனப் பெற்றோல் ஆடையில் பட்டதை அறியாது புகைப்பிடித்த ஒருவர் தீ பற்றியதில் உயிரிழந்தார்.

அளவெட்டியைச் சேர்ந்த 45 வயதுடைய சத்தியசீலன் தர்மசீலன் என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்நபர், கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில், மதுபோதையில் மோட்டார் சைக்கிளைத் திருத்திய வேளை, அவர் அணிந்திருந்த உடையில் பெற்றோல் பட்டதை அறியாது புகைப்பிடித்தபோது நெருப்பு பற்றி எரிந்துள்ளது.

அவரை, தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Leave a Reply