யாழில் வளர்ப்பு நாய் கடித்து மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழ்.அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி – தோப்பு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய வைரமுத்து வசந்தராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் தெரியவருவது,
கடந்த மாதம் அவர் வளர்த்த நாய் அவரை கடித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மேலும், நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரை கடித்த வளர்ப்பு நாள் கடித்த மறுநாளே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply