காதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பரிந்துரைக்கமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வடக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பமான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பைஸர் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் விசேட தேவையுடைய 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் இத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.



