இந்திய வெளியுறவுச் செயலாளர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று மாலை இலங்கை வரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளர்.
அதன்போதே, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உதவியுடன் யாழ்.மாநகரில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தைப் பார்வையிடும் நோக்குடன் அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றார்.
மேலும், இவர் தென்னிலங்கை அரசியல் தலைவர்களுடன் அரசியல் உயர்மட்டப் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


