வழமைக்கு திரும்பியது முல்லைத்தீவு!

கொரோனாத் தாக்கம் காரணமாக கடந்த 41 நாட்களாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டமும் வழமைக்கு திரும்பியுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் அதேவேளை, மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மக்கள் தமது தேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply