புத்தளம் – ஆணமடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் காமினி வாடிகமங்காவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, பெண்ணொருவரை துப்பாக்கியால் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதலுக்கு உள்ளான பெண், ஆணமடுவ பகுதியில் வசிக்கும் 58 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரிவித்துள்ளார்.
வயல் எல்லை தொடர்பான பிரச்சினை காரணமாக இந்த மோதல் நடந்துள்ளதாகவும், முன்னாள் பிரதேச சபை தலைவர் தன் கையில் இருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணின் மார்பு மற்றும் முகத்திலும் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு தாக்குதலுக்கு உட்பட்ட பெண் ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆணமடுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.


