மன்னாரில் உலக சிறுவர் தின நிகழ்வு!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பலா மரக்கன்றுகள் வழங்கப்பட்டமையுடன், பிரதேச செயலக வளாகத்துக்குள் மர நடுகையும் நடைபெற்றது.

இதன்போது, உதவி பிரதேச செயலாளர் எஸ்.டிலக்ஸ்சன் மற்றும் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply