கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று தளர்தப்பட்டதை அடுத்து, 41 நாட்களின் பின் யாழில் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வழமைக்கு திரும்பியுள்ளது.
யாழ். நகர பகுதியில் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள், வியாபார நடவடிக்கைகள் போன்றன திறக்கப்பட்டு பொதுமக்கள் சேவைகளும் நடைபெற்றுள்ளன.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த போக்குவரத்து மற்றும் ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக் கொள்வதுடன் சுகாதார விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவுறுத்தல்கள் தொடர்ந்தும் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டு வருகின்றன.


