சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிசார்!

ஆயுர்வேத வைத்தியசாலையில் பணிபுரியும் செவிலியருக்கு சொந்தமான ஸ்மார்ட் போன் ஒன்று காணாமல் போன காணத்தினால், வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த 14 நோயாளிகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரியவருவது,

இறக்குவானையில் உள்ள அரசு ஆயுர்வேத வைத்தியசாலை பணிபுரியும் தாதியருக்கு சொந்தமான நவீன கையடக்க தொலைபேசி வைத்தியசாலையில் பணியில் இருந்தபோது காணாமல் போயுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்திருந்த 14 பேர் மீதும் தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறி, இறக்குவானை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்த பொலிசார் சிகிச்சை பெற வந்திருந்த 14 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், குறித்த தொலைபேசி தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், அங்கு வந்திருந்த பெரும்பாலான நோயாளிகள் மிகவும் வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாமல் இருந்த நோயாளிகள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த தாதியாரின் புகாரின் படி காணாமல் போன கையடக்க தொலைபேசி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, தொலைபேசியின் வலையமைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply