யாழ்ப்பாணம், பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இவ் விபத்தில் 67 வயது மதிக்கத்தக்க நேசந்திரன் என்ற வயோதிபரே காயமடைந்துள்ளார்.
இவ் விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே, வயோதிபரை மோதி விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
விபத்துக்குள்ளான நபருக்கு கால் உடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.




