ஆவரங்காலில் வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், ஆவரங்கால் மேற்குப்பகுதியில் அபாயகரமான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்கள் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வாள்களை மறைத்துக்கொண்டு சென்றதாக அச்சுவேலி இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிக்கு தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது. இதன் அடிப்படையிலேயே குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாள்களை கொண்டு வந்தவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply