யாழில். விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓடியவருக்கு 1,25,500 ரூபாய் தண்டம்!!

மதுபோதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார்.

இந்நபர் மீது 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குற்றப்பத்திரத்தை பொலிஸார் தாக்கல் செய்தனர்.

மதுபோதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி, காப்புறுதிப் பத்திரமின்றி, வரிப் பத்திரமின்றி, தலைக்கவசமின்றி, தலைக்கவசம் அணியாதவரை பின் இருக்கையில் இருத்தி வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.

அதனால், மதுபோதையில், காப்புறுதிப் பத்திரமின்றி, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதமும் ஏனைய 4 குற்றங்களுக்கு 50 ஆயிரத்து 500 ரூபாயும் தண்டப்பணமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது

Leave a Reply