மல்லாகத்தில் சக்திவாய்ந்த வெடிபொருள் கண்டுபிடிப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து சக்திவாய்ந்த வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த காணியின் உரிமையாளர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் காணியை சுத்தம் செய்தவேளை குறித்த வெடிபொருள் அவதானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வெடிபொருளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply