கொடிகாமத்தில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்புரத்தை சேர்ந்த 40 வயதுடைய அ.சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்தார்.

மிருசுவில் பகுதியில் இன்று மாலை பட்டா வாகனத்தை மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்ட போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொடிகாம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply