2030ம் ஆண்டு இலங்கை சனத் தொகையில் ஏற்படவுள்ள மாற்றம்!

2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் உள்ள முதியவர்களின் தொகை 20 வீதமாக காணப்படும் என சமூக சேவை பணிப்பாளர் மற்றும் முதியோருக்கான தேசிய சபை உறுப்பினருமான சந்தன ரணவீர தனது ஆராய்வின் மூலமாக தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போது இந்த நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான முதியவர்கள் வாழ்கின்றனர்.

2012 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை நடத்திய கணக்கெடுப்பின்படி, வயதானவர்களின் மக்கள் தொகை அப்போது 2.5 மில்லியனாக 12 வீதமாக காணப்பட்டது.

முதியோருக்கான தேசிய முகாமை நிறுவனமானது, தற்போது அவர்களுக்காக ஏராளமான சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, முதியோரின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களை மேம்படுத்துதல், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காண்பது மற்றும் அதற்கான தீர்வுகளை வழங்குதல், சமுதாயத்தின் வளர்ச்சி, ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் வழங்குதல், குறைந்த வருமானம் கொண்ட மூத்த வயதினர்களுக்கு பாதுகாப்புத் திட்டத்தை நிறுவுதல் போன்ற பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply