இலங்கை முஸ்லிம் மக்கள் மீது சிங்கள மக்கள் சந்தேகம் மற்றும் வெறுப்பு கொள்ளத்தக்க வகையில் இனவாதத்தை தூண்டும் விஷமக் கருத்துக்களை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வைத்தார் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரான யூ.எல்.எம்.என் முபீன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி கொழும்பு ஊடகம் ஒன்றில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இதனையடுத்து பலதரப்பட்ட தரப்பிலிருந்தும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.இந்நிலையிலேயே அவர் இந்த பகிரங்க மடல் (2அவது மடல்) ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மேலும் நாாளுமன்ற உறுப்பினர்களை மேற்கோள்காட்டி அவர் இந்த மடலை வெளியிட்டுள்ளார்.
அந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்,
இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்திய நெறியாளர் இத்தகைய இனவாதக் கருத்துக்களை தேரர் தங்கு தடையின்றி முன்வைத்த போது அதற்கு விமர்சன ரீதியாக எத்தகைய எதிர் வினாவையும் எழுப்பி விமர்சன ரீதியிலான விளக்கத்தை பெற முயற்சிக்காமல் ஞானசார தேரரின் வெறுப்புக் கருத்துகள் மூலம் முஸ்லிம் மக்களுக்கெதிராக சிங்கள அப்பாவி மக்கள் விரோதம் கொள்வதற்கு ஏற்றவகையில் தாராளமாக இடம் வழங்கினார்.
மேலும் முஸ்லிம் மக்களை நடமாடும் குண்டுதாரிகளாக காண்பிக்க தேரர் முயன்றமைக்கு கொழும்பு ஊடகம் எப்படி அனுமதி அளித்தது?


