வவுனியாவில் நடந்த திருட்டு- தீவிர தேடுதல் வேட்டையில் பொலிசார்..!

வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டினை உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாததை அறிந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை உடைத்து உள்ளே நுளைந்துள்ளனர்.

அத்தோடு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுண்நகை மற்றும் 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் என்பனவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply