
பலாங்கொடை பஹந்துடாவ எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு , அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஜோடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் அவ்விருவரும் ஆஜராகிய நிலையில், தலா 10 ஆயிரத்து 800 ரூபாயும் ஒத்தி வைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
மஹரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே முன்னதாக, கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்
வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்விருவரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

