ஜப்பான் கடற்படையின் பாரிய கப்பல்களான Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு கப்பல்களும் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சியில் ஈடுபட்டதையடுத்து இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன.
இரு போர் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.


