சுகாதார நிபுணர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறியதால், அடுத்த சில நாட்களில் எத்தகைய அறிவிப்பும் இல்லாமல் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அரச செவிலியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அரச செவிலியர்கள் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டை ஒரு வாரத்திற்கு மூடுமாறே நாங்கள் கூறினோம். ஆனால் அரசாங்கம் ஐந்து வாரங்களுக்கு நாட்டை மூடியுள்ளது.
நாடு இவ்வளவு காலம் மூடப்படும் என்று தொழிற்சங்கம் எதிர்பார்க்கவில்லை.
மேலும், நாட்டை நீண்டகாலமாக மூடுவது பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மேலும் சரிவு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


