ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில்  ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது.

கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுகின்றமையினால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply