பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ச வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த பூனையைக் கண்டு பிடித்து தருபவருக்கு பெரும் பரிசு தரப்படும் எனவும் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த பூனை அங்கோரா வகையை சேர்ந்தது எனவும், அதன் பெறுமதி 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் எனவும் மேலும் தெரியவந்துள்ளது.


