உலகுக்கு அகிம்சையை போதித்த இந்தியாவின் தேசபிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 152 ஆவது ஜனனதினம் இன்றாகும்.
அதனை முன்னிட்டு இன்று இலங்கையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், மகாத்மா காந்தியின் 152 ஆவது ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் கதிர் பாரதிதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


