நாட்டின் LNG ஏகபோகத்தை எந்த நாட்டிற்கும் வழங்கக் கூடாது! – டலஸ் அழகப்பெரும

இலங்கைக்கு உரித்தான LNG யின் (திரவ இயற்கை எரிவாயு) ஏகபோக உரிமையை எந்த வெளிநாட்டிற்கும் வழங்கக்கூடாது என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம், நிதி அமைச்சரிடம் இது தொடர்பான விடயங்களை முன்வைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நமது நாட்டின் திரவ இயற்கை எரிவாயு வழங்கல் மீதான ஏகபோக உரிமை மற்றொரு நாட்டிற்கு வழங்கப்படக்கூடாது என்பது தனது உறுதியான நிலைப்பாடு என்றும், இதுதொடர்பில், அமைச்சரவையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சகோதர கட்சிகள் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் விவாதிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply