பல கதைகளை கேட்டு அச்சம் வேண்டாம்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சமூகத்தில் பரவும் பல்வேறான கதைகளால் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

அதன்படி, 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 3.3 மில்லியன் இளைஞர்களில் மிக குறைந்த அளவிலானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்காக இளைஞர்களும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply