மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளமையுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 30,000 மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டமையுடன், கசிப்பு உற்பத்தி செய்வதற்கான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினர் இரண்டு வீடுகளில் முன்னெடுக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.


