ஐக்கிய மக்கள் சக்தியின் 53 உறுப்பினர்கள் ஐந்து பிரிவுகளாக பிரிந்ததால் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி எழுந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பாராளுமன்ற குழுக்கள், மேலாண்மை குழுக்கள் மற்றும் அரசியல் கவுன்சில்கள் எடுத்த முடிவுகளை செயல்படுத்தாமல் தனது சொந்த கருத்தின் அடிப்படையில் செயல்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கட்சி மூத்தவர்களுடன் கலந்தாலோசிப்பதில்லை எனவும் தனிப்பட்ட முடிவெடுக்கும் முறை பற்றி பலமுறை விவாதிக்கப்பட்டாலும் அதுமட்டும் அவரிடம் மாறவில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிரி இதனை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, கட்சித் தலைவரின் நடவடிக்கையால் சில உறுப்பினர்கள் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்துக்கும் மேற்பட்ட ஐ. ம. சக்தி கட்சியின் உறுப்பினர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகின்றனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்களும் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.