மட்டக்களப்பில் உயிரிழந்த பெண்; கணவன் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, மகிளூர் பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (01) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிளூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி மகிளூர் பல நோக்கு கூட்டுறவு சங்க வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் கணவன், திருமணம் முடித்துவிட்டு வெளிநாடு சென்று கடந்த 18 நாட்களுக்கு முன்னர் வீடுதிரும்பியுள்ள நிலையில் அவர் அனுப்பிய பணம் தொடர்பாக கணவன் – மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளர்.

சம்பவதினமான நேற்று இரவும் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் 38 வயதுடைய கணவனை கைது செய்துள்ள பொலிஸார், சடலத்தை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply