மதுபோதையில் வாகனம் செலுத்திய 188 பேர் கைது

188 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேல் மாகாணத்தில் நேற்று(02) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10 மணிமுதல் 12 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply