தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்- பந்துல

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்தும் அரசியலையும் விட்டு விலக போவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தனது நற்பெயரையும் அரசியல் வாழ்க்கையையும் சேதப்படுத்தியதாகக் கூறி, முன்னாள் நுகர்வோர் விவகார ஆணையத்தின் உறுப்பினர் துஷான் குணவர்தனவுக்கு ரூ .1 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

பூண்டு இறக்குமதி மற்றும் விநியோகத்தில் மோசடி நடந்ததாக அவர் கூறிய குற்றச்சாட்டால் தனது நற்பெயரும் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோரப்பட்ட இழப்பீட்டு பணத்தை கொடுக்காவிட்டால் அதனைப் பெற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மோசடி தொடர்பாக அவரது பெயரை பயன்படுத்தி அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்,அரசாங்கம் தனக்கு இது தொடர்பான நீதி வழங்க வேண்டும் எனவும், அவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இந்த மோசடியில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது மட்டுமல்லாமல் இலங்கை அரசியலில் இருந்தும் விலகி விடுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *