இலங்கையில் நவம்பர் மாதத்திற்குள் நாளொன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.


