யாழில் இன்று இரவும் வாள்கள் மீட்பு!

சுழிபுரம் பகுதியில் வீடொன்றில் இருந்து வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்ட வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply