முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தீர்த்தக்கரை, சிலாவத்தை, நாயாறு ஆகிய பகுதிகளிலுள்ள 54 குடும்பங்களுக்கு அரிசிப்பொதிகள் வழங்;கப்பட்டன.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்படும் ‘வாழ்வோம் வளம்பெறுவோம்’ செயற்றிட்டத்தின் 47 ஆவது கட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தை குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன்முதலாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், இதுவரையில் 2,826 குடும்பங்கள் இதில் பயனடைந்துள்ளனர்.
அத்தோடு புலம்பெயர்நாட்டில் வசிக்கும் குபேரன், சைலேந்திரி, செழியன் ஆகியோர் இச் செயற்றிட்டத்துக்கு நிதி உதவி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார்.



