பதுளையில் ஒருவரை அடித்து கொலை செய்த கும்பல்!

பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை, லிதமுல்ல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த குறித்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பில் பதுளை பகுதியைச் சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply