வவுனியாவில் வாள்வெட்டுத் தாக்குதல்: நால்வர் காயம்!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மதுபோதையில் நின்ற குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியமையுடன் வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனால், பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையின் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply